நெஞ்செரிச்சலை தவிர்க்க என்ன செய்யலாம்?
பொதுவாக வயிற்றில் சுரக்கும் அமிலம் மூலம் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
வயிற்றில் அதிகளவு உணவு இருக்கும்போது, அஜீரணப் பிரச்னை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது.
எனவே, மசாலா உணவுகளை அடிக்கடி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக காரம், புளிப்பு, டீ, காபி போன்றவற்றை ஒரே நாளில் பல முறை எடுத்துக் கொள்வதாலும் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
புகை பழக்கம், மது பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளது.
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கட்டாயமாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.