கருவளையத்தை போக்கும் இயற்கை எண்ணெய்கள் : ஆண், பெண் இருவருக்கும், முக அழகை கெடுக்கும் விதமாக ஏற்படும் பிரச்னை கருவளையம்.
தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் 'வைட்டமின் ஈ, மற்றும் கே' சத்துகள் உள்ளன.
சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.
பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தேய்பதன் மூலம் கண்களுக்கு நல்ல ஓய்வும், கருவளையம் விரைவில் மறையும்.
இந்த எண்ணெயை கண்களுக்கு கீழ் நரம்புகள் பலம் பெரும் வகையில், மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
அழகியல் பயன்பாட்டிற்காக பெருஞ்சீரகம் விதை எண்ணெய்கள் பண்டைய ரோமில் உயோகிக்கப்பட்டதாக சான்றுகள் உண்டு.
இவை கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை நீக்குவதுடன், அங்கு காணப்படும், சுருக்கங்களை குறைக்கும்.
கருவளையத்தையும் போக்கும் தன்மை கொண்டது யூகலிப்டஸ் எண்ணெய். இவை பயன்படுத்துவதால், கண்களுக்கு கீழ் ரத்த ஓட்டம் சீராகி, திட்டுகள் உருவாகுவதை தடுக்கும்.
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ, டி, இ, கே என பல சத்துகள் உள்ளன. இதை வட்ட இயக்கங்களில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.