பெரிமெனோபாஸ் அறிகுறிகளும் தீர்வுகளும்...

40 வயதுக்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று தான். அதனால் பயப்பட வேண்டாம். இதற்கு பெரிமெனோபாஸ் (perimenopause) என்று பெயர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெரிமெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் நிற்கும் நிலைக்கு முந்தைய காலகட்டமாகும்.

தொடர்ந்து 4 மாதம் முதல் 8 மாதம் வரை நடக்கும். கருப்பை குறைந்த ஈஸ்ட்ரோஜனை எடுத்துக் கொள்வதால் இது போன்ற நிலை ஏற்படும்.

இந்த நேரத்தில் பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன்மாற்றம் கூட ஏற்படும்.

அசோகப்பட்டை சேர்ந்த மருந்துகள், தண்ணீர் விட்டான் லேகியம், அஸ்வகந்தம், விதை மல்லிகள், ஆழிவிதை போன்றவற்றை எடுத்துக்கொள்ள சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இவை தவிர் பெண்கள் பாதாம், அத்திப்பழம், பீட்ருட், நெல்லிக்காய் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் மாதவிடாய் காலத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

திரிபலா பொடி எடுத்துக் கொள்வதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும்.

உணவு பழக்கத்தை தாண்டி தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் அதிகப்படியான வியர்வை வரும். அதை குறைக்க வேண்டும் என்றால் காபி, காரமான உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வருடம் மாதவிடாய் ஏற்படவில்லை என்றால் அந்த பெண்ணுக்கு மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டதாக கருதவேண்டும்.