மூட்டு வாத நோய் உடலில் எங்கு எல்லாம் வரும்?

நாற்பது ஆண்டுகளுக்கு முன் கவனத்திற்கு வந்த ருமட்டிசம் எனப்படும் மூட்டு வாத நோய் தற்போதும் அதிகம் அறியப்படாத ருமட்டாலஜி என்ற தனி சிறப்பு மருத்துவப் பிரிவாக மாறிவுள்ளது.

ருமட்டிசம் என்ற சொல் ஆர்த்ரைடீஸ் என்றே தற்போது குறிப்பிடப்படுகின்றது.இதில், 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

பொதுவாக இந்த நோய்கள் அனைத்தும் ஆட்டோ இம்யூன் டிசாடர் எனப்படும் சுய எதிர்ப்பால் வருகின்றது.

நம் வெள்ளை அணுக்கள் நம் உடலில் உள்ள திசுக்களை, செல்களை வேறு இடத்தில் இருந்து இரவல் வாங்கப்பட்டதாக நினைத்து அதைத் தாக்கும். உடலில் உள்ள எந்த உறுப்பையும் பாதிக்கலாம்.

இந்த பாதிப்பு சிறுநீரகங்கள், தோல், இதயம், செரிமான மண்டலம், நுரையீரல், மூளை, ரத்த அணுக்கள் உட்பட மற்ற உறுப்புகளை பாதித்தால், 'சிஸ்டமிக் லுாபஸ்' என அழைக்கப்படுகிறது.

தோல் இறுக்கம், நுரையீரல் சுருக்கம் ஏற்பட்டால் 'சிஸ்டமிக் ஸ்க்லீரோஸிஸ்' எனவும் பல் வேறு விதமான நோய்களாக உருவெடுக்கும்.

தோல் நோயான சோரியாசிசும் சுய எதிர்ப்பு நோயாகும். இதிலும் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு ஸொரியாட்டிக் ஆர்த்ரைட்டீஸ் தோன்றும்.