டிராகன் பழம் - முதுமை தோற்றத்தை தடுக்கும் அற்புதம்...!

இதில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது.

தோல் பிரச்னைகளுக்கு நன்மை பயக்கும் என்றும், முதுமை, முகப்பரு, வெயில் தாக்கம் உள்ளிட்டவற்றை தடுத்து, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

இதில் உள்ள வைட்டமின் பி வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கவும், புறஊதா கதிர்களால் ஏற்படும் சிவத்தல், வீக்கம், அரிப்பு உள்ளிட்டவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது.

டிராகன் பழ ஜெல்லை கூழாக்கி முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து பருத்தி துணியை கொண்டு சுத்தம் செய்தால் முகப்பருக்கள் நீக்கும்.

டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி,சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். டிராகன் பழச் சாற்றை தினமும் குடித்து வந்தால் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும், பளபளப்பாகவும் உதவும்.

டிராகன் பழ கூழுடன், தயிர் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், இறந்த செல்கள் நீக்கப்பட்டு வயதான தோற்றத்தை தடுக்கும்.