உடல் எடை குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள்!
கோடைக்காலத்தில் கலோரிகள் குறைவாக உள்ள காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கின்றன.
தினமும் அன்றாட உணவில் இந்த காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும்.
சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இந்த காய்கறி உடல் வறட்சியை நீக்குவது மட்டுமின்றி, கண் பார்வையையும் கூர்மையாக்கும்.
நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனைக் கோடையில் அதிகம் சாப்பிட்டால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும் பாகற்காய், கெட்ட கொழுப்புகளையும் நீக்கும்.
முட்டைக்கோஸ், கொலஸ்ட்ரால் பிரச்னையைத் தடுத்து, கல்லீரலைச் சுத்தம் செய்யும்.
உடல் எடை குறைப்பதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறைந்த கலோரிகளைக் கொண்டது.
குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.