சர்க்கரைவள்ளி கிழங்கின் நன்மைகள்
ஆங்காங்கே ரோட்டோரங்களிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு இனிப்புச்சுவையாக இருப்பதாலேயே பலரின் 'பேவரிட்' லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.
ஆனால், இனிப்பையும் தாண்டி பல ஆரோக்கிய நன்மைகள் இதில் அடங்கியுள்ளன. புரதம், பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன. அதேவேளையில், கொழுப்பு மிகக்குறைவே.
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் பாதிப்பை குறைக்க உதவுகின்றன. சாப்பிடும் போது தோலை உரிக்க வேண்டியதில்லை; வேக வைக்கும் முன் நன்றாக ஸ்க்ரப் செய்தாலே போதுமானது.
சர்க்கரைவள்ளக் கிழங்கில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், மலச்சிக்கல் பிரச்னையை தவிர்க்கவும் உதவுகிறது.
டைப் 2 நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின், பார்வைத்திறன் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. சுவாச அமைப்பு மற்றும் குடலில் உள்ள சளி சவ்வுகளின் ஒருமைப்பாட்டை பராமரிக்க வைட்டமின் ஏ முக்கியமானது.