அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ: தடுக்க சில வழிகள்!

கண்களை உறுத்தும் நோயான மெட்ராஸ் ஐ தொற்று தற்போது பரவி வருகிறது. விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றின் காரணமாக இது ஏற்படுகிறது.

கண் எரிச்சல், கண்ணிலிருந்து தொடர்ந்து நீர் வழிதல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல். இமை மற்றும் கண்களைச் சுற்றிலும் வீக்கம், கண் வலி, போன்றவை மெட்ராஸ் ஐ நோயின் அறிகுறியாகும்.

கண் இமைக்குள் ஏதோ ஒரு பொருள் மாட்டிக் கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு, உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு பார்வைக்கூட மங்கலாகக் கூடும்.

மெட்ராஸ் ஐ கண் நோய் வேகமாகப் பரவும். மெட்ராஸ் ஐ பாதிப்படைந்தவருடன் அருகிலிருப்பது, அவர் பயன்படுத்திய கைக்குட்டை, துணி, படுக்கை, தலையணையை தவிர்க்க வேண்டும்.

மருத்துவரை சந்தித்து உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் பரிந்துரைக்கும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கண்களில் வெயில் படாமல் இருக்கவும், பரவுவதை தடுக்கவும் கூலிங்கிளாஸ் அணியலாம்.

அடிக்கடி கைகளை கழுவவேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள் தங்களை ஒரு சில நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளலாம்.

கண் தொற்றுள்ளவர்கள் அவர்கள் பயன்படுத்தும் கைக்குட்டை, டிஸ்யூ பேப்பர்களை பத்திரமாக அகற்ற வேண்டும்.