இதயத்தை அச்சுறுத்தும் நான்கு இவை!
நெஞ்சுவலி, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் குறித்து அமெரிக்கா, தென் கொரியாவில் ஆய்வு நடந்தது.
அதில், 90 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, அதிக ரத்த சர்க்கரை, புகையிலை பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரச்னைகள் தான் 99 % பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக இதய பாதிப்பு உள்ளவர்களில் 93 % பேரிடம் உயர் ரத்த அழுத்த பாதிப்புள்ளது.
60 வயதுக்குட்பட்ட பெண்களில், இதய பாதிப்புக்கு உள்ளாவோரிடம், இந்த நான்கு காரணங்களில் ஒன்றோ அல்லது இரண்டோ உள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
எனவே, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயமென வலியுறுத்தப்பட்டுள்ளது.