கர்ப்பபையில் நீர்கட்டிகள் உருவாவது ஏன்?
கர்ப்ப பையில் நீர்கட்டிகள் வருவதற்கான பாரம்பரிய காரணம் ஜீன்கள் தான் என கூறப்படுகிறது.
ஆனால் எல்லோருக்கும் அப்படி வராது. இது ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் ஏற்படும்.
உலகளவில் இந்திய பெண்களுக்கு தான் இந்த நீர்கட்டி பிரச்னை அதிகளவில் வருகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
நீர்கட்டி இருந்தால் எடை அதிகரித்தல், மாதவிடாய் பிரச்னை, கர்ப்ப பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.
இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு அதிக முகப்பரு, முகம், மார்பு, வயிறு பகுதிகளில் முடி அதிகம் வளரும்.
சில நேரங்களில் கருவுறுதல் கூட தாமதமாகும். சிறு வயதில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் வரவும் வாய்ப்புள்ளது.
ஹார்மோன் பிரச்னையால் ஏற்படுவதால் அதற்கான சிகிச்சை எடுப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.