திராட்சையின் 8 ஆரோக்கிய நன்மைகள்

சிவப்பு திராட்சை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளதால், தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும். யூரிக் அமிலத்தை குறைக்க இது உதவும்.

தொடர்ந்து உட்கொள்ளும்போது, இதிலுள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் என்ற ஆக்ஸிஜனேற்றங்கள், இதயம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

இதிலுள்ள பாலிபினால்கள் ரத்த ஓட்டம் மற்றும் மூளை, சருமத்துக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்துகின்றன.

சிவப்பு திராட்சையில் போதுமான நார்ச்சத்து மற்றும் நிறைய தண்ணீர் உள்ளதால், பருமனான உடல் கொண்டோர், எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தீர்வாகும்.

இதிலுள்ள கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் ஏ கண் பார்வை திறனை மேம்படுத்தும்; ஃபிளாவனாய்டுகள் கண் செல்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.

போதுமான அளவு கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். மூளைக்கு தீங்கு உண்டாக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.