கோடையில் இம்சை தரும் வியர்வை நாற்றம் : போக்க சில டிப்ஸ்...
வியர்வை என்பது உடலில் சுரக்கும் சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது.
வியர்வையில் கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை நமக்கு உண்டாக்குகிறது.
அதனால் கோடைக்காலத்தில் தினமும் இரண்டு முறை குளியுங்கள்.
வாசனை சோப்புகளைப் பயன்படுத்தாமல் கிருமிகளை நீக்கும் சோப்புகளை பயன்படுத்துங்கள்.
சோப் அலர்ஜி உள்ளவர்கள் அக்குளில் கடலை மாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்து வரவும்.
குளித்த பிறகு ஈரம் போக துடைத்து விட்டு பின் உடை அணியுங்கள்.
மாதம் இரு முறை அல்லது கட்டாயம் ஒரு முறை அக்குளில் இருக்கும் முடிகளை நீக்குங்கள்.
கற்றாழையை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் வாடை நீங்கும்.
அக்குளை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணியாமல் தளர்வான காற்று உள்ளே போகும் வகையில் பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
நிறைய மோர், தினம் ஒரு இளநீர் குடிக்கவும். உடல் குளிர்ச்சியடையும்.
மல்லி விதை கொண்டு கஷாயம் செய்து 50 மி.லி. அளவில் தினம் இருவேளை குடிக்கவும். உங்களை டீடாக்ஸ் செய்ய உதவும்.