முதியோர்களுக்கு வரும் கண் பிரச்னைகளும் தீர்வுகளும்!

பொதுவாக முதியோர்களுக்கு புரை, நீர் அழுத்த நோய், விழித்திரை பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது 45 வயதுக்கு மேல் புரை பாதிப்பு, பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.

பார்வையில் ஏதேனும் வேறுபாடுகள் தெரிந்தால், உடனடியாக பரிசோதனை செய்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, நீர் அழுத்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இப்பாதிப்பை சரியாக கவனிக்காமல் விட்டால், பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

கண்ணின் உள்பகுதியில் உள்ள நீர் அழுத்தம் அதிகமானால், நரம்புகள் பாதிக்கும். ஆண்டுக்கு ஒரு முறை, நீர் அழுத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஒரு சிலருக்கு விழித்திரை சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. உடலில் நீர் இழப்பு காரணமாக, கண்களில் உள்ள ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பார்வையில் பாதிப்பு ஏற்படும்.

இதனால், வெயில் காலத்தில் அதிக தண்ணீர், இளநீர், மோர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இனிப்புகள், பிஸ்கட், குக்கீஸ், ஓட்டல் உணவுகளை முடிந்த வரை தவிர்த்து, சத்தான உணவு முறைக்கு பழக்கப்படுவது உடலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் நல்லது