ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி வருமா?

உயரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காகவும், அழகுக்காகவும் பெண்கள் ஹைஹீல்ஸ் அணிய விரும்புவர்.

மூட்டுவலி வர பல காரணங்கள் இருந்தாலும், ஹைஹீல்ஸ் அணிபவர்களுக்கு அதுவும் ஒரு காரணம்தான்

ஹீல்ஸ் வைத்த காலணிகளால் குதிகால் மற்றும் மூட்டு வலி கண்டிப்பாக ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.

அலுவலகம், ஷாப்பிங் என வெளியே செல்லும் போது பல பெண்கள் ஹீல்ஸ் வைத்த செருப்புகள், ஷூ போன்றவற்றை விரும்பி அணிவதால், கால் தொடர்பான பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுவதாகவும் கூறப்படுகிறது.

உடலின் மொத்த எடையையும் தாங்கும் பாதப் பகுதி, ஹீல்ஸ் காலணிகள் காரணமாக, எடையை சமநிலை படுத்த முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றன.

ஹைஹீல்ஸ் அணிவோருக்கு உடலின் மையப்பகுதியில் இயற்கையாக இருக்கும் புவிஈர்ப்பு சக்தி முன்னோக்கி தள்ளப்படும்.

மேலும் பாதங்களில் உள்ள தசை, எலும்புகளில் பிளவு உண்டாகிறது. இது, குதிகால் வலி, கீழ் வாதம் உள்ளிட்ட ஏராளமான கால் தொடர்பான பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கிறது

முக்கியமான விழாக்கள் தவிர, மற்ற நேரங்களில் ஹைஹீல்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.