உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் மஞ்சள் பூசணி !
சாம்பல் பூசணி, அரசாணிக்காய், பரங்கிக்காய் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மஞ்சள் பூசணி ஒரு நீர்க்காய் ஆகும்.
இதில் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும் கலோரிகள் குறைவாகவே உள்ளது.
ஒரு கப் (250 கிராம்) மஞ்சள் பூசணியில் 50 கலோரிகள் அடங்கியுள்ளதால், எடை இழப்புக்கு உகந்த உணவாகும்.
அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பிற கார்போஹைட்ரேட்டுகளை விட இதை அதிகமாக உட்கொள்ளலாம், ஆனால் இன்னும் குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ளலாம்.
பூசணியில் உள்ள நார்ச்சத்து, நீண்டநேரம் பசியை கட்டுப்படுத்த உதவுவதால், உடல் எடையை ஆரோக்கியமாக கட்டுக்குள் வைக்கலாம்.
கலோரி, கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளதால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சாய்ஸாகும். இதிலுள்ள பீனாலிக் பண்புகள் நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
பூசணி விதையில் உள்ள மாக்னீசியம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் பூசணி விதைகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
பூசணி விதைகளை நொறுக்கு தீனியாகவோ, சாலட்டில் சேர்த்தோ அல்லது ஓட்ஸ், தயிர் போன்றவற்றின் மேலே தூவியோ சாப்பிடலாம்.