கார்ப்ஸ் எடையை அதிகரிக்கிறது என்பது கட்டுக்கதையா?
ஒருவர் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே உடல் எடையை அதிகரிக்காது, காரணம் அவை புரதத்தில் உள்ள அளவு ஆற்றலை கொண்டுள்ளன.
மன அழுத்தம், மரபியல் காரணம், கர்ப்பக்காலம், மாதவிடாய் பிரச்னை மற்றும் சில மருந்துகள் கூட உடல் எடையை அதிகரிக்க வைக்கும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் கூட இயற்கையாகவே கார்ப்ஸ் இருப்பது பலருக்கும் தெரியாமல் கூட இருக்கலாம்.
உடலுக்கு தேவையான கலோரிகளில் 45 - 65% வரை கார்ப்ஸ் வழங்குகின்றன. அது கிடைக்கவில்லை என்றால் உடல் சோர்வு, மந்தம் நிலை மற்றும் ஆற்றல் பற்றாக்குறை உண்டாகும்.
பொதுவாக இந்தியர்களுக்கு ஒரு நாளைக்கு 282 கிராம் வரை கார்போஹைட்ரேட்ஸ்
தேவைப்படும். ஆனால் இது வயதிற்கு ஏற்ப நபருக்கு நபர் வேறுபடும்.
மேலும் கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமே சாப்பிட்டுவிட்டு எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தால் அது கொழுப்பாக மாறக்கூடும்.
கார்ப்ஸ் எடுத்துக்கொள்ளும் போது 10 நிமிடங்களுக்குப் பின் வாக்கிங் செல்வது செரிமானத்திற்கு உதவுகிறது.
ஆக மொத்தம் உங்கள் டயட்டில் கார்போஹைட்டை நிச்சயம் இருக்கலாம், ஆனால் உங்கள் உடலுக்கு ஏற்ற அளவு எடுக்கவும்.