மார்பு வலி ஏற்படும் அனைவருக்கும் ஆஞ்சியோகிராம், பை பாஸ் தேவையில்லை!
உலகளவில் அதிக இறப்புகளில், மாரடைப்பு முதல் இடத்திலுள்ளது. இன்றைய வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.
உடல் இயக்கமின்மை, உடல் பருமன், அதிக எண்ணெய், ஜங்க் உணவு, மன அழுத்தம், துாக்கமின்மை, புகை மற்றும் மது பழக்கம் காரணமாக இதயம் பாதிக்கப்படுகிறது.
ஆஞ்சியோகிராம் என்பது, ரத்த நாளங்களிலுள்ள அடைப்புகளை கண்டறியும் பரிசோதனை. அனைவருக்கும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
நெஞ்சுவலி, சுருக் சுருக் என குத்துவது, மூச்சு விடுவதில் சிரமம், நடந்தால் மூச்சு வாங்குவது, இ.சி.ஜி. பரிசோதனையில் மாற்றம் இருந்தால் மட்டும் எடுத்தால் போதும்.
பைபாஸ் என்பது அனைவருக்கும் தேவையில்லை. மூன்று நாளங்களும் அடைத்து இருப்பவர்களை கூட, ஆப்ரேஷன் இன்றி காப்பாற்றலாம்.
இயற்கையாகவே ரத்த நாளங்கள் தாமாக புதிதாக உருவாகி இதயத்தை காப்பாற்றிக்கொள்ளும். சரியான உடற்பயிற்சி, உணவு முறையை பின்பற்றினாலே போதும்.
இரவு நேரத்தில் வயிற்றை நிரப்பாமல் லேசாக வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு பழங்கள் எடுத்துக்கொண்டால் போதுமானது.
குடும்ப டாக்டரிடம் அவ்வப்போது வழிகாட்டுதல் பெற்றுக்கொண்டாலே போதுமானது.