இன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம்
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுப்பது, சிகிச்சை முறை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக. 1ல் உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆண், பெண் என இருபாலருக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். ஆண்களுக்கு புகைப்பழக்கத்தாலும், பெண்களுக்கு மரபு வழியாகவும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
தொடர் இருமல், இருமும் போது ரத்தம் வெளியேறுதல், எடை குறைவது, நெஞ்சுப்பகுதியில் வலி ஆகியவை நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.
பாதிப்பு உள்ளவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனைகளில், 75 முதல் 80 சதவீதம் கட்டிகள் கண்டறியப்படுகிறது.
மிகச்சிறிய கட்டிகளை கண்டறிய சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
புகைப்பழக்கம் உடையவர்கள், குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பு இருப்பவர்கள் இப்பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதனால் உரிய சிகிச்சை மூலம் குணமடையலாம்.
இவ்வாண்டின் கருப்பொருள், "தடைகளை உடைத்தல்: ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சமமான பராமரிப்பை மேம்படுத்துதல்" ஆகும்.