மழைக்காலத்தில் குழந்தைகளை காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
மழைக் காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொது இடங்களுக்கு அழைத்த செல்வதை தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.
வீட்டிற்கு திரும்பியவுடன் கைகளை கழுவிய பின் உணவுப் பொருட்களை தொட அனுமதிக்க வேண்டும்.
வீட்டில் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும்.
சிறிய காய்ச்சல் இருந்தாலும் டாக்டரை அணுக வேண்டும்.
தானாக மருந்து எடுப்பதால் பக்கவிளைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
டாக்டரை அணுகும் போது வயதிற்கு ஏற்ற மாத்திரை வழங்குவர்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் ரத்த பரிசோதனை செய்து சாதாரண காய்ச்சலா, வைரல் காய்ச்சலா என்பதை பார்க்க வேண்டும்.