குழந்தைகள் ஸ்மார்ட் போனில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?
சில குழந்தைகளிடம் காலை எழுந்தது முதல் துாங்கும் வரை ஒரு தொடர்ச்சியான ஸ்மார்ட் போன் பயன்பாடு உள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு 'டொபமைன்' எனும் மகிழ்ச்சிக்கான வேதிப்பொருள் அதிகம் வெளியாவதால் அவர்கள் சலிப்பு உணர்வை பழகுவதில்லை.
இதனால் ஒரு முறை ஸ்மார்ட் போன் பயன்படுத்தி விட்டு சிறிது சலிப்பு வந்ததுமே மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த பெற்றோர் நிறைய பொம்மைகள் தந்து, கற்றல் வகுப்புகளில் சேர்க்கின்றனர். இவையெல்லாம் ஒரு வகை திணிப்பு தான்.
இதை விட குழந்தைகளுக்கு 'டிலேய்ட் கிரட்டிபிகேஷன்' கற்று தருவது நல்லது. அதாவது ஒரு விஷயம் நடக்க அதற்கான உழைப்பை தர வேண்டும், காத்திருக்க வேண்டும் என்பது தான்.
கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை செய்து வெற்றி கண்டால் தான் 'டொபமைன்'எனும் மகிழ்ச்சி வேதிப்பொருள் வெளியாகும்.
அதற்கு குழந்தைகளின் சூழல் எளிமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாமும் அலைபேசியை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
காய்கறி வாங்க செல்லும் போது கடைகளுக்கு கூட்டி செல்வது, சிறுசேமிப்பு செய்வது, வீட்டை சுத்தம் செய்வதில் அவர்களையும் ஈடுபட செய்வது போன்றவை அவசியம்.