கோடை மழையால் உண்டாகும் ஜலதோஷத்தை தவிர்க்க...!

சூடான தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை, தேன் சேர்த்து குடித்தால் ஜலதோஷம் சரியாகும்.

ஒரு கப் பாலில் சிறிது மிளகுத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, 3 நாட்களுக்கு சாப்பிட ஜலதோஷம் குறையக்கூடும்.

தண்ணீரில் புதிதாக அரைத்த இஞ்சி சிறிது சேர்த்து நன்றாக கொதித்தவுடன், சர்க்கரை கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

ஒரு கப் இஞ்சி டீ குடிப்பது சளி, காய்ச்சல், இருமலை சமாளிக்கக்கூடிய பழமையான பாட்டி வைத்தியம்.

கொதிக்க வைத்த தண்ணீரில் புதினா இலைகளைப் போட்டு நீராவி பிடித்தால் மூக்கடைப்பு, வறட்டு இருமல் கட்டுக்குள் வரும். .

1 கப் தண்ணீரில் சிறிது துளசி இலைகள் மற்றும் இஞ்சி, 2 கிராம்பு, 4 மிளகு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக வற்றியவுடன் தேன் சேர்த்து 3 நாட்களுக்கு காலையில் குடித்து வர சளி, இருமல் நீங்கும்.