சைனஸ் கோளாறை போக்க சில இயற்கை வைத்தியங்கள்...
முகத்தின் எலும்புகளுக்குள் உள்ள காற்றறைகளில் ஏற்படும் நீர்க் கோர்த்தல், அழற்சி, ஒவ்வாமை, கிருமித் தொற்றால் உண்டாகும் நிலையே மண்டை பீனிசம் எனப்படும்.
சைனஸ் என்று அழைக்கப்படும் இந்த பீனிச நோய் உள்ளவர்கள், பொதுவாக மழை, பனிக் காலங்களில் கடும் அவதிப்படக்கூடும்.
தும்மல், மூக் கடைப்பு, மண்டை பாரம், காதடைப்பு, தலைவலி, புருவம், கன்னங்களில் வலி ஆகியவை படுத்தி எடுக்கும். சிலருக்கு வாசனை தெரியாமல் போவது, துாக்கமின்மையும் ஏற்படும்.
நொச்சித் தைலம், பீனிச தைலம், சுக்குத் தைலம் போன்ற மூலிகைத் தைலங்களை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தாலே மண்டைச் சளி நீங்கும்; மூக்கடைப்பு, சளி, காய்ச்சல் நலமாகும்.
இரண்டு, மூன்று நீர்க்கோர்வை மாத்திரையை நன்றாக நுணுக்கி, சூடான பாலில் கலந்து நெற்றி, புருவம், கன்னங்களில் பற்று போட்டு இரண்டு மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.
துாதுவளை, துளசி, முசுமுசுக்கை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
நீர்க் காய்கறிகள், முளைக்கீரை, பசலைக் கீரை, குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
'ஏசி'யை மிதமாகவும், சுத்தமாகவும் பயன்படுத்துவது முக்கியம்.