உணவில் கீரை வகைகள் ஏன் அவசியம்?

தினமும் நாம் உணவில் காய்கறிகள் மட்டுமின்றி கீரையும் இருக்க வேண்டும். இது சத்தான இலை; பச்சை காய்கறியாகும்.

ஒவ்வொரு கீரையிலும் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும், தாது பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.

சிறு கீரை, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, புளிச்சகீரை மற்றும் தண்டு கீரை உட்பட ஏராளமான வகைகள் உள்ளன.

இருப்பினும், 20 வகை கீரைகளை மட்டுமே வாரத்தில் 2 அல்லது 3 முறை என பலரும் பயன்படுத்துகின்றனர்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் கீரைகள் உதவுகின்றன.

இது கூந்தல் வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ரத்த சோகையை நீக்கவும் மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.