குறையும் சூரிய ஒளி !
இந்தியாவில் சூரிய வெளிச்சத்தின் அளவு கடந்த 40 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
இதற்கு கட்டுப்பாடற்ற காற்று மாசுபாடு, சமநிலையற்ற மேகமூட்டம் உள்ளிட்டவையே முக்கிய காரணம் என ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பனாரஸ் ஹிந்து பல்கலை, இந்திய வானிலை மையம் இணைந்து சூரிய ஒளி குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதில், 1988 - 2018ல் நாட்டிலுள்ள 20 வானிலை மையங்களின் தரவுகளில் இருந்து தினசரி சூரிய ஒளி பிரகாசிக்கும் நேரம் கணக்கிடப்பட்டது.
இதன்படி, ஆண்டுதோறும் சூரிய ஒளியின் நேரம் குறைந்து வருவது கண்டறியப்பட்டது.
குறிப்பாக வட மாநில சமவெளிகளில், சூரிய ஒளியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்பட்டது.
தாவரங்களின் வளர்ச்சி, மின்சார உற்பத்தி என சூரிய ஒளியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
குறைந்த சூரிய ஒளி வைட்டமின் டி குறைபாட்டுக்கு வழிவகுப்பதுடன், தொடர்ச்சியான புகைமூட்டம் அல்லது மூடுபனி சுவாச ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.