காதில் சீழ் வடிவது ஏன்? என்ன செய்ய வேண்டும்?

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம்தான்.

இதன் துவக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும்.

இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும்.

இந்த சமயத்தில் உடனே கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், சளியில் உள்ள கிருமிகள், தொண்டையையும் நடுக்காதையும் இணைக்கிற குழல் வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும்.

பிறகு அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக் கொண்டு வெளி காது வழியாக சீழ் வெளியேறும்.

காதில் சீழ் வடிந்தால், அது செவித் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.