குளிர் காலத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?
குளிர்காலத்தில் பொதுவாக உடல் வெப்பநிலை குறையும். இதனால் உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படலாம்.
குறிப்பாக இந்த காலகட்டத்தில் மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
குளிர்ந்த காலநிலையில் ரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவு தேர்வில் கவனமுடன் இருக்க வேண்டும்.
உடல்நல சிக்கல்களைத் தவிர்க்க, ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
வைட்டமின் டி அதிகரித்தால் இன்சுலின் சீராக உதவும். சூரிய ஒளி கிடைப்பது கடினம் என்பதால் பால் பொருட்கள், முட்டை, மீன் எடுக்கலாம். சப்ளிமெண்ட்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நார்ச்சத்துள்ள தானியங்கள், மாவுச்சத்து இல்லாத காய்கறிகள், கொழுப்பு குறைவாக உள்ள நட்ஸ்களை எடுக்க வேண்டும்.