குறை தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடுமா?

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடுவதற்கு உணவு மட்டும் காரணம் என கூற முடியாது.

ஒரு சில நோய்களும் குறிப்பாக குறை தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் கொழுப்புச் சத்து கூடும்.

குறை தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு தைராய்டை துாண்டும் ஹார்மோன் (டி.எஸ்.எச்) அளவு ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.

கல்லீரலில் கெட்ட கொலஸ்ட்ராலை பிரித்து பித்த நீரில் வெளியேற்றும் தன்மையை இந்த நோய் குறைத்து விடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகரிக்கிறது.

தைராய்டு பரிசோதனை செய்யும் போது லிப்பிட் பரிசோதனை சேர்த்து செய்வதன் மூலம் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு கூடுதலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இப்பிரச்னை உள்ளவர்கள் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை மட்டும் குறைக்கும் மாத்திரைகளை எடுத்து கொள்வதுடன், குறை தைராய்டுக்கான மாத்திரைகளை எடுக்க அறிவுறுத்தபடுகிறது.