அல்சர் பிரச்னையா? எப்படி குணப்படுத்தலாம்? தெரிந்து கொள்வோம்!

அல்சர் என்பது உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களாகும். இதை பெப்டிக் அல்சர் என்றும் அழைப்பர்.

அதுவே இரைப்பையில் புண் ஏற்பட்டால் 'கேஸ்ட்ரிக் அல்சர்' என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் 'டியோடினல் அல்சர்' என்றும் அழைக்கப்படுகிறது.

காரம் நிறைந்த உணவுகள், தவறான உணவுப் பழக்கங்கள், பட்டினி இருப்பது, வலிநிவாரணி மாத்திரைகள், மது , புகை பழக்கம், காபி, தேநீர் பானங்கள் அதிகம் குடிப்பது போன்ற பல காரணங்களால் அல்சர் வரக்கூடும்.

பாக்டீரியா தொற்று, மன உளைச்சல், அதீத கவலை, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வரத் தூண்டும்.

உணவுப் பழக்கத்தைச் சரிப்படுத்திக்கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம்

இட்லி, புட்டு, இடியாப்பம் போன்ற வேகவைத்த பாரம்பரிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவும். விரைவு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

புகை பழக்கத்தை விட வேண்டும். மேலும் மது அருந்தக் கூடாது, அதேபோல் பான்மசாலா போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் நோயைக் குணப்படுத்த உதவும். அடிக்கடி மோர் குடிக்கலாம்.

தர்பூசணி, முள்ளங்கி, பூசணிக்காய், புடலைங்காய், வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.