வைரஸ் காய்ச்சல் ஏன் பரவுகிறது?

தட்ப வெப்பநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதன் தாக்கத்தால் தான் சளித்தொல்லையுடன் கூடிய காய்ச்சல் ஏற்படுகிறது.

காய்ச்சல் பாதிக்கப்பட்டோரில் 10 சதவீதம் பேருக்கு வயிற்று போக்கு உள்ளது.

எனவே, லேசான காய்ச்சல் வந்தாலும் டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும். அலட்சியம் காட்டினால் சிக்கலாகி விடும்.

பொதுவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பனிக் காலத்தால் பாதிப்பு வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அதிகாலை, மாலை நேரங்களில் வெளியே விட வேண்டாம்.

60 வயதுக்கு மேற்பட்டோர் பனிக்காலத்தில் அதிகாலை நடைபயிற்சியை கைவிடுவது நல்லது.

தலையில் மப்ளர் கட்டிக்கொள்வது, ஸ்வெட்டர் அணிவது அவசியம். மார்புச்சளி உருவாகி, மூச்சுத் திணறும் நிலை வரும்.

பூச்சிகளால் பாதிப்பு வரலாம் என்பதால் ஜன்னலில் தடுப்பு வலை அமைக்கலாம்.