காய்ச்சல் பரவல் எதிரொலி: முகக்கவசம் அணிய அறிவுரை

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

பருவநிலை மாற்றம், மழை உள்ளிட்ட காரணங்களினாலும் காய்ச்சல், சளி உள்ளிட்டவை பரவி வருகின்றன.

இதனால், ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தது.

முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.