கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவு பாதிப்பு… அச்சம் வேண்டாம்!
கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலினின் தேவை அதிகமாகிறது. அந்தத் தேவையை கர்ப்பிணியின் கணையம் பூர்த்தி செய்யவில்லை என்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடும்.
உடல் பருமன், குடும்பத்தில் சர்க்கரை நோய் இருத்தல், நீர் கட்டிகள், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படலாம்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வயிற்றில் உள்ள குழந்தையின் எடை கூடும், மேலும் பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். பல நேரங்களில் அவசர அறுவை சிகிச்சை செய்யவேண்டிவரும்.
காலை வெறும் வயிறில் : 70 - 90 mg/ dl, 1 மணி நேர உணவுக்கு பின் : 70-- - 140 mg/ dl, 2 மணி நேர உணவுக்கு பின் : 70- - 120 mg/ dl என சர்க்கரை இருக்கவேண்டிய அளவு இதுதான்.
சர்க்கரையை கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடும், உடற் பயிற்சியும் அவசியம்.
பெரும்பாலும் மெட்பார்மின் என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. சிலருக்கு இன்சுலின் பரிந்துரைக்கப்படுகிறது.
கருவுற்று 20 வாரங்களுக்குப் பின் வரக்கூடிய நீரிழிவு பாதிப்பு பிரசவத்திற்குப் பின் குணமாகிவிடும். பிரசவமாகி ஆறு வாரங்களுக்குப் பிறகு இதை உறுதி செய்து கொள்வது நல்லது.