நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?
கரும்பு ஜூஸில் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ் மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதிலுள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
செரிமானம் மற்றும் கல்லீரல் பிரச்னைகளை தவிர்க்கவும் உதவுகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு உடலில் நீரேற்றத்தை தக்க வைக்கிறது.
இதன் டையூரிக் பண்புகள் உடலிலுள்ள கழிவுகள் மற்றும் நோய்த்தொற்றுகளை தவிர்க்க உதவுகிறது.
இதில் சுக்ரோஸ் என்ற இயற்கை சர்க்கரை அதிகளவில் உள்ளது. இது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
இருப்பினும், நீரிழிவால் பாதிக்கபட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால், சர்க்கரையை தவிர்த்து அளவாக ஜூஸ் குடிக்கலாம்.