பற்சிதைவை தடுக்கும் வழிமுறைகள் என்ன?

பற்சிதைவை தடுக்க காலை, இரவு இரு நேரமும் பல் துலக்க வேண்டும். மிருதுவான, நடுத்தர வகை டூத் பிரஸ்களை பயன்படுத்தலாம்.

குழந்தைக்கு பாட்டில் பால் கொடுத்தவுடன் ஈறு பகுதியை தண்ணீரால் நன்றாக துடைத்து விட வேண்டும்.

வைட்டமின் சி மற்றும் டி, கால்சியம் சத்துக்கள் மிகுந்த ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்காய், காய்கறிகள், கீரைகள், பழங்களை தினசரி உணவுகளில் சேர்க்க வேண்டும்.

அதேப்போல், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பல் ஈறும், எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

தினமும் பால் அருந்தும்போது, இதிலுள்ள கால்சியம் பல்லுக்கு பாதுகாப்பு தரும்.

முடிந்தளவுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.