ஆஸ்துமா உள்ளவர்கள் குளிர்காலத்தில் எப்படி உடலை பராமரிப்பது?
சளி, காய்ச்சல், நிமோனியா உள்ளிட்டவை குளிர்காலத்தில் தான் ஏற்படுகிறது.
துாசி, பூச்சிகள், பூஞ்சை மற்றும் செல்லப்பிராணி ஆகியவற்றால் ஒவ்வாமை உள்ளவர்கள் குளிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஒவ்வாமை ஆஸ்துமாவைத் துாண்டும். இதனால் ஆஸ்துமா உள்ளவர் சளி காய்ச்சல் அல்லது நிமோனியாவால் பாதிக்கப்படும் போது சுவாசப் பிரச்னை அதிகரிக்கும்.
இரவு தொடர்ச்சியான இருமல் இருக்கும்.
சிறிய உடற்பயிற்சி செய்தாலே காற்றை சுவாசிக்க சிரமப்படுதல்.
மார்பில் அழுத்தம், மூச்சுத் திணறல், மிகுந்த சோர்வு இருக்கும்.
உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.