ஆபத்தாகும் உடல் பருமன்
உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது உலகளவில் உடல்பருமன் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சிறுவர்களும் ஒபிசிட்டியால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலை விஞ்ஞானிகள் எலிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, உணவுமுறையால் ஏற்படும் உடல்பருமன் என்பது, மனக்கவலை, மூளையின் சிக்னல்களில் மாற்றம், குடல் நுண்ணியிர்களில் ஏற்படும் மாற்றத்தால் மூளை செயல்பாடுகளில் பாதிப்பு ஆகியவைக்கு காரணம்.
இது தவிர நீரிழிவு, இதய பிரச்னைக்கும் வழிவகுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமனை தவிர்க்க சர்க்கரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, முழுமையான இயற்கை உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை முடிந்தளவு தினசரி மேற்கொள்ள வேண்டும்.