விரதத்தின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
விரதம் என்பது மத சடங்குகளில் முக்கியமான ஒரு பகுதியாகும். அனைத்து மதத்தினரும் பல விழாக்களையொட்டி பல வருடங்களாக இந்த சடங்கினை பின்பற்றி வருகின்றனர்.
இக்கால இளம் தலைமுறையினரும் உடல் எடையை குறைப்பதற்கு விரதத்தை ஒருவழியாக எண்ணுகின்றனர்.
விரதம் என்பது உணவு பொருட்களை முழுமையாக தவிர்த்து தண்ணீரை மட்டும் உட்கொள்வது ஆகும்.
சில நேரங்களில் தண்ணீர் குடிப்பதையும் முழுமையாக தவிர்த்து மக்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
சில நேரங்களில் பழச்சாறுகளை மட்டுமே உட்கொண்டு விரதத்தை கடைபிடிக்கின்றனர்.
மேலும் சில நேரங்களில் வேகவைக்காத பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர்.
இவ்வாறு விரதம் எடுக்கும் பொழுது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முதுமை தெரியாமல் இருப்பதற்கு இவ்விரதம் பெரிதும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு உண்ணாமல் விரதம் இருப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.