நீராவி குளியல் எடுப்பதால் வரும் நன்மைகள் அறிவோமா…

மரப்பெட்டியின் உள்ளே செலுத்தப்படும் ஆவியில், 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். இது தான் நீராவிக் குளியல். உடல் முழுக்க வியர்க்கும்.; தேவையில்லாத கழிவுகள் வியர்வைவோடு வெளியேறும்.

அமரும் முன், முழு உடல் மசாஜ் செய்து அமர வேண்டும். குளிர்ந்த நீரில் நனைத்த ஈரத் துணியை தலையில் போட வேண்டும்.

துரித உணவுகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, கழிவுகள் முறையாக வெளியேறாமல் உடலில் தங்கி விடும். இதனால், பல உடல் பிரச்னைகள் ஏற்படலாம். இவர்களுக்கு நீராவி குளியல் நல்ல பலனை தரும்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் நீராவி குளியலோடு, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்தால், உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம்.

இது தவிர, தோல் பாதிப்பு உள்ளவர்கள் மாதம் ஒரு முறை எடுத்துக் கொண்டு இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் பட்சத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

உடல் நன்கு வியர்த்து கழிவு வெளியேற்றத்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முகப்பருக்கள் மறையும். மேலும் பலவித உடல் பாதிப்பை தடுக்கலாம். முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கலாம்.

நீராவி குளியல் எடுத்த பின், பழச்சாறு குடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பின், எளிதில் செரிமானம் ஆகக் கூடிய எண்ணெய், மசாலா, காரம் இல்லாத ஆவியில் வேக வைத்த உணவாக சாப்பிடலாம்.

இதய கோளாறு உள்ளவர்கள் நீராவி குளியல் எடுப்பதை தவிர்க்க வேண்டும்