குழந்தைகளுக்கு இன்ஹேலர் மருந்துகள் பாதுகாப்பானதா?

சமீப காலமாக குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் அதிகரித்து வருகிறது.

பரம்பரை காரணங்கள், குறைந்த எடையுடன் பிறத்தல், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நுரையீரல் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.

மேலும், காற்று மாசுபாடு மற்றும் உடல் பருமன் போன்றவற்றாலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

மழையால் ஏற்படும் மண் வாசனை, செல்லப் பிராணிகளின் ரோமம், துாசிகள், புகை, வீட்டில் உள்ள குப்பை போன்றவையும் இதற்கு காரணமாக உள்ளன.

இன்ஹேலர் மருந்துகளை டாக்டரின் பரிந்துரைப்படி பயன்படுத்தினால் நோயை கட்டுப்படுத்த முடியும்.

இன்ஹேலர்கள் பாதுகாப்பானவையே. பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. அடிமையாக மாற்றாது.