கண் உறுத்தலை தவிர்க்க என்ன செய்யலாம்?

கண்களில் கண்ணீர் வறட்சி, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஒருசில நேரங்களில் கண் உறுத்தல் ஏற்படலாம்.

செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்துதல், 'ஏசி' அறையில் அதிக நேரம் செலவிடுவது, வெப்பநிலை உள்ளிட்ட காரணங்களாலும் கண்களில் உறுத்தல் ஏற்படலாம்.

இதனை தவிர்க்க உலர் பழங்கள், முந்திரி, பாதாம், மீன் உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

டாக்டரின் பரிந்துரைப்படி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

துாங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கண்புரை ஆபரேஷன் செய்யும்போது கண் உறுத்தல் ஏற்படக்கூடும் என பலரும் தவறாக கணிக்கின்றனர்.

ஆனால், அதிநவீன முறையில் கண் ஆபரேஷன் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் உறுத்தல் ஏற்பட வாய்ப்பிருக்காது.