தலைமுடி வளர்ச்சியை தூண்டும் தனியா விதைகள்..!

கொத்தமல்லி விதைகள் உடலில் அதிகப்படியான சோடியம் மற்றும் தண்ணீரை வெளியேற்றும். ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

கொத்தமல்லி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது.

கொத்தமல்லி விதைகளில் உள்ள எத்தனாலிக் சாறு, நீரிழிவு குறைப்பாட்டை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் பீட்டா செல்களின் செயல்பாடு அதிகரிக்கிறது.

கொத்தமல்லி விதைகளை(தனியா விதை) தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமானத்தை ஊக்குவிக்கும்.

கொத்தமல்லி விதைகள் முடி வளர்ச்சியைத் தூண்டி புதிய முடி வளரவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது.

கொத்தமல்லி விதைகளில் லினோலிக் அமிலம் உள்ளது. இது வாய் புண்கள் மற்றும் புண்களையும் குணப்படுத்தும்.