பிள்ளை வளர்ப்பான் வசம்பு... பயன்கள் அறிவோமோ!!
குழந்தைகளுக்கு எந்தவித நோய்த்தொற்று வராமல் தடுத்து, ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால்தான் வசம்பிற்கு, 'பிள்ளை வளர்ப்பான்', 'பிள்ளை வளர்த்தி' என்று அழைப்பர்.
இதன் வாசனைக்கு கொசு உட்பட எந்தப் பூச்சியும் குழந்தையின் அருகில் நெருங்காது என கூறப்படுகிறது.
மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு சிட்டிகை வசம்பு பொடியுடன் தேவையான அளவு தேன் சேர்த்து குழைத்து, ஒரு நாளைக்கு ஒருமுறை, நான்கு நாட்கள் நாக்கில் தடவலாம்.
இதனால் பால் குடித்ததும் ஏப்பம், எதுக்களிப்பு, வயிறு பொருமல் உட்பட எந்த செரிமானப் பிரச்னை இருந்தாலும் குணமாகும்.
அதேபோல் குமட்டல், வயிற்றுப்போக்கு, மந்தம், வயிற்று வலி என்று எந்த பிரச்னையாக இருந்தாலும் இயற்கையாக குணப்படுத்தும் தன்மை வசம்பிற்கு உள்ளது.
ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பொடியை தாய்ப்பாலுடன் சேர்த்து நாக்கில் தடவலாம்.
வாயு, வயிற்று வலியால் அழும் குழந்தைக்கு, வசம்பை நெருப்பில் சுட்டு, கருகிய பொடியை தேங்காய் எண்ணெயுடன் குழைத்து, தொப்புளைச் சுற்றி, அடிவயிற்றில் தேய்த்தால் நலம் தரும்.
பள்ளி செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க, மாதம் ஒருமுறை வசம்பு பொடியை தேனில் குழைத்து தரலாம்.