டீன் ஏஜ், வயது முதிர்வு கர்ப்பத்தால் அதிகரிக்கும் குறைபிரசவங்கள்
குழந்தை பேறு என்பது அவ்வளவு எளிதல்ல. 37 வாரத்திற்கும் குறைவாக பிறக்கும் குழந்தை பிறப்பு குறைபிரசவம் என கருதப்படுகிறது.
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல்
முழுமையாக விரிவடையாததால் மூச்சுத்திணறல், மூளை சார்ந்த பிரச்னை, கிட்னி
பாதிப்பு, மஞ்சள் காமாலை உட்பட பல பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ளன.
1 மற்றும் 1.5 கிலோவுக்கு கீழ் பிறக்கும் குழந்தைகள் காப்பாற்ற அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், 500 கிராம் அதற்கு கீழ் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை ஒன்றும் செய்ய இயலாமல் போகிறது.
டீன் ஏஜ் கால பிரசவம், 35 வயதுக்கு மேல் பிரசவம், தாய்க்கு
நோய் பாதிப்புகள் இருப்பது, கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள், ஊட்டச்சத்து
குறைபாடு போன்றவை குறைபிரசவத்துக்கு காரணமாகும்.
நீரிழிவு,
கர்ப்பகால நீரிழிவு, ரத்த சோகை, இதயம் மற்றும் நுரையீரல் போன்ற நோய்
பாதிப்பு, கர்ப்பப்பை வாய் அளவு குறைவு போன்ற காரணங்களும்
குறைபிரசவத்துக்கு வழிவகுக்கிறது.
கர்ப்ப காலத்தில் உரிய பரிசோதனை செய்துகொள்ளவேண்டியதும், ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதும் அவசியம்.
பிரச்னைகள் இருப்பது முன்கூட்டியே தெரிந்தால் அதற்கேற்ப சிகிச்சை செய்து, பாதிப்பை தவிர்க்கலாம். முதல் குழந்தை குறைபிரசவம் என்றால், 2வதும் குறைபிரசவத்தில் பிறக்க அதிக வாய்ப்புள்ளது.