மண்ணீரல் ஆரோக்கியத்திற்கு இதோ சில டிப்ஸ்

ஆரோக்கியமாக வாழ, உடல் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

உடனே பலரும் பிரதான உறுப்புகளான இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் என்று தான் நினைப்பர். இதற்கு இணையாக மண்ணீரல் இருப்பது பெரும்பாலும் தெரியாது.

நிமோனியா, மூளைக் காய்ச்சலை உருவாக்கும் குறிப்பிட்ட சில வகை பாக்டீரியா தொற்றுகளிடம் இருந்து பாதுகாப்பது உட்பட நிறைய வேலைகளை செய்கிறது மண்ணீரல்.

கல்லீரலுக்கு அருகில் வயிற்றின் இடது பக்கமுள்ள மண்ணீரலின் முக்கிய வேலை, ரத்தத்தை உருவாக்கி, சேமித்து, வடிகட்டி, நோய் எதிர்ப்பு காரணிகளை உருவாக்கி, உடலைப் பாதுகாக்கிறது.

நிறைய தண்ணீர் குடிப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சமச்சீரான உணவு சாப்பிட்டு உடல் எடையை சீராக பராமரிப்பது ஆகியவை மண்ணீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

காய்கறிகளும், பழங்களும் ரத்த சிவப்பணுக்கள் உருவாக முக்கிய காரணமாகும்.

எனவே, கேரட், பீட்ரூட், வெள்ளரி, முள்ளங்கி, புதினா, பூண்டு, முளைகட்டிய தானியங்கள், தேங்காய் மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்.

கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, பைனாப்பிள், பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஆகியவை பழங்கள் மண்ணீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ரத்த சோகையுடன் இருப்பவர்கள், ஆட்டின் மண்ணீரலை வாரத்திற்கு இரு முறை சாப்பிட்டால், ஒரே மாதத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.