அக்குபஞ்சர் மருத்துவத்தின் அடிப்படை அறிவோமா!

அக்குபஞ்சர் மருத்துவ முறை உருவானது சீனாவில் தான். குறிப்பாக சீன நாட்டின் அரச குடும்ப மருத்துவர் உருவாக்கியதாக கூறப்படுகிறது

நம் உடலில் உள்ள பிராண சக்தியை சீனமொழியில் 'கியூ யு ஐ' என்பர்கள்.

பிராண சக்தி உடல் முழுதும் சீராக சென்றால், எந்த நோயும் வராது.

எங்காவது ஒரு இடத்தில் தடைபடும்போது, நோய் வருகிறது.

முழங்கையில் பிராண சக்தி தடைபட்டால், அதற்கு கீழ் உள்ள பகுதியில் பலவீனம், உணர்ச்சியற்ற தன்மை, ஜில்லிட்டுப் போவது என்று ஏதோ ஒரு அறிகுறி இருக்கலாம்.

பிராண சக்தி தடைபட்ட பகுதிக்கு மேல், வலி, வெப்பம், இறுக்கம், வீக்கம் அழற்சி வரலாம்.

எந்த இடத்தில் பிராண சக்தி தடைபட்டதோ, அந்த இடத்தில் உள்ள நாடி எனப்படும் புள்ளியில் ஊசியால் குத்தி, தடைபட்ட பிராண சக்தியை வெளியேற்றும்போது, நோய் குணமாகிறது.