ஆரோக்கியத்தை பராமரிக்க டாக்டர்கள் என்ன செய்ய வேண்டும்?

வழக்கமான உடல் பரிசோதனை; ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை நோய், இசிஜி மற்றும் தேவைப்படும் போது மன அழுத்த சோதனைக்கு வருடாந்திர பரிசோதனை அவசியம்.

தூக்கத்திற்கு முன்னுரிமை... குறைந்தது 7 மணி நேரம் தூங்க முயற்சிக்கவும். ஆப்ரேஷன் நேரம் போலவே இதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்.

தினசரி உடற்பயிற்சி... குறைந்தது 30 நிமிடம் வேகமாக நடத்தல், ஜாக்கிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

உணவு... சமச்சீரான உணவு, வறுத்த உணவுகள் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

மன அழுத்தம் போக்க... யோகா, தியானம், சுவாசப் பயிற்சிகள் அல்லது மன ஆரோக்கியத்தை புதுப்பிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

புகையிலை மற்றும் மதுவை முழுமையாக தவிர்ப்பது மிக அவசியம்.

ஆதரவான சூழல்... சக மருத்துவர்களுடன் நேரத்தை செலவிடுவது, மன ஆரோக்கிய பரிசோதனைகள், வேலைசோர்வு மற்றும் மனச்சோர்வை சமாளிக்க உதவும்.

உடலை கவனியுங்கள்... நெஞ்சு அசவுகரியம், காரணமில்லாத சோர்வு அல்லது மூச்சுத் திணறல் ஆகியவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.

விடுமுறை...இடைவேளைகள் எடுப்பது, விடுமுறைக்குச் செல்வது, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது அவசியம்.