கண்களுக்கடியில் வரும் கருவளையங்களுக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு, தூக்கமின்மை, வாழ்க்கை முறை மாற்றம், வேலைப்பளு, கணினியை அதிக நேரம் பார்த்தல் உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு.
கருவளையங்களைத் தவிர்க்க, சரும வறட்சி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கனிகளை உண்ணவும்.
குங்குமப்பூவை ஒரு டீ ஸ்பூன் காய்ச்சாத பாலில் ஊற வைத்து விரல்களால் தொட்டு கருவளையம் இருக்கும் இடத்தில் தடவினால் கருமை நிறம் மாற துவங்கும்.
கற்றாழை ஜெல்லை கண்களுக்கடியில் மென்மையாக தடவலாம். இது கண்களுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். ஈரப்பதமும் அதிகரிக்கும். கருவளையங்களை குறைக்கும்.
ஆலிவ் ஆயில் கொண்டு கண்களுக்கு கீழ் மென்மையாக மசாஜ் செய்து இரவு முழுவதும் விட வேண்டும். தொடர்ந்து செய்வதால் கருவளையங்கள் மறையும்.
உருளைக்கிழங்கு சாறு கருவளையத்தைப் போக்கி, சரும பொலிவை அதிகப்படுத்தும். அந்த சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
புதினா இலையின் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்டாக குழைத்து கண்களுக்கு அடியில் தடவலாம். பின் நீரில் கழுவிடவும். கருவளையங்கள் விரைவில் நீங்கும்.
ஆரஞ்சு தோலை நன்கு காயவைத்து பொடியாக்கவும். அதை பன்னீரில் கலந்து கருவளையங்களில் தடவ வேண்டும், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.