மூல நோய் வராமல் காப்பது எப்படி?

மூலநோய் வராமலிருக்க நார்ச்சத்து நிறைந்த காய்கறி, கீரை, பழங்கள், உலர் பருப்புகள் சாப்பிட வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

புரோட்டா, பிரியாணி, இறைச்சி வகைகளை குறைத்துக் கொள்வதோடு இரவில் இவற்றை சாப்பிடக்கூடாது.

எளிதில் செரிமானம் ஆவதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மனஅழுத்தம் உருவாக எத்தனையோ காரணங்கள் இருப்பினும், மலச்சிக்கல் முக்கிய ஒன்றாக கூறப்படுகிறது. எனவே, எந்த சூழலிலும் நிதானமாக செயல்பட்டால் மனப்பதட்டத்தை குறைக்கலாம்.

மலத்தை அடக்காமல் காலையில் வெளியேற்றுவதை பழக்கமாக கொண்டால் மூலம், பவுத்திரம் வராமல் தடுக்கலாம்.