குளிர் காலத்தில் கொப்புளம் ஏற்பட என்ன காரணம்? தவிர்க்க சில டிப்ஸ்!!
பொதுவாக குளிர் காலத்தில் சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தலையில் எறும்பு கடி, கொசுக்கடி போன்று சிறிய கொப்புளங்கள் வரும்.
மேலும் கொப்புளம் ஏற்பட முக்கியக் காரணங்கள், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (Cold Sores) மற்றும் வறண்ட சருமம் (Winter Rash) ஆகும்.
குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் தேய்த்து காலை 8:00 முதல் 10:00 மணிக்குள் 10 நிமிடங்கள் வெயிலில் நிற்க வேண்டும். அப்போது வியார்வையால் நீர் வெளியேறி விடுவதால் அவை வராது.
குளிர் காலத்தில் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 2 லிட்டருக்கு மேல் கட்டாயம் பருக வேண்டும்.
மெதுவான சூட்டில் சீரகத்தண்ணீர் பருகலாம். இந்த சீசனில் தயிர், மோர் பலருக்கு பிடிக்காது.
வடிகஞ்சி நீரில் உடனடியாக எடுத்து சுடுநீர் கலந்து நெய், மிளகுப் பொடி கலந்து குடித்தால் மிகவும் நல்லது. வறண்ட இருமல் குணமாகும். தோலுக்கும், வயிற்றுக்கும் நல்ல உணவாகும்.
இந்த குளிர் காலத்தில் எந்த மாதிரியான ஆடைகள் அணிகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. குளிர்ந்த காற்றை தவிர்க்க கழுத்து, காது பகுதியில் 'டவல்' பயன்படுத்தலாம்.
குளிர்ந்த பானங்களை சாப்பிட வேண்டாம். அதில் சர்க்கரை, குளுகோஸ் சேர்ந்துள்ளதால் மேலும் கொப்புளங்கள் வர வாய்ப்பு உள்ளது. கீரை, தக்காளி சூப் சாப்பிட வேண்டும்.
நீர்ச்சத்துள்ள மஞ்சள் நிற காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். குறிப்பாக மஞ்சள் பூசணி, கேரட், பப்பாளி, அன்னாசி ஆகியவை சாப்பிடலாம்.