சிறுநீரக செயலிழப்பிற்கு காரணமென்ன?

சிறுநீரகம் நம் உடலில் நீர் சத்து சீராக இருக்கவும், நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

கால்சியம் சத்து சீராக இருக்கவும், ஹீமோகுளோபின் உருவாவதற்கான ஹார்மோன் சுரக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீரிழிவு பாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது

அதிக ரசாயனம் கலந்த உணவு உண்பதாலும், அடிக்கடி வலி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.

இவற்றை தடுக்க ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உடலில் ஏற்படும் பிரச்னைக்கு டாக்டர் ஆலோசனையின்றி மருந்து மாத்திரைகளை உண்ணக்கூடாது.

சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள் சாக்லேட், பேரிச்சம்பழம் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும்.

முறையான உடல் பரிசோதனை செய்து டாக்டரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.