முகத்திற்குச் சோப்பு ஆரோக்கியமானதா? செக் பண்ணுங்க!
சோப்புகளில் 5.5 அளவு பி.எச் இருந்தால் மட்டுமே முகத்தில் ஈரப்பசை குறைவாக இருக்கும். அப்படி இருந்தால் தான் முகத்தைத் தொற்று நோய்களிலிருந்து கட்டுப்படுத்துவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆனால் தற்போது நாம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான சோப்புகளில் 7முதல் 9 வரை பி.எச் அளவு உள்ளது.
பி.எச் அளவு அதிகமாக உள்ள சோப்புகளை பயன்படுத்தும் போது முகம் வறட்சியாவதுடன், பருக்கள், எரிச்சல் அதிகளவில் உருவாகக் காரணமாக உள்ளது.
எனவே, சோப்புகளில் கவனம் செலுத்தாவிட்டால் சரும பிரச்சினைகளை உருவாக வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
சோப்பை நேரடியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. முதலில் முகத்தை நன்றாகக் குளிர்ந்த நீரில் கழுவி விட்டு, பின் சோப்பை கைகளில் தேய்த்து, பிறகு முகத்தில் தடவ வேண்டும்.
அதிக நேரம் முகத்திற்குச் சோப்பு போடும்போது, சருமத்திலுள்ள இயற்கையான செல்கள் அழிந்து வறட்சியை ஏற்படக்கூடும். 2 முதல் 5 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் சருமம் நிச்சயம் பாதிப்படையும்.
முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் முகப்பருக்கள் அதிகம் இருப்பவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி சோப்பைப் பயன்படுத்தினால் சிறந்தது.
முகத்திலுள்ள அழுக்குகள், கிருமிகளைப் போக்கத் தினமும் 2 முறை பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அவற்றையும் சோதனை செய்து பயன்படுத்தினால் சிறப்பானது.